நீர்ச்சோறு இடுவது:
திருமணம் முடிந்த அன்று இரவோ அல்லது மறு நாளிலோ, பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு சென்று மாப்பிள்ளைக்கு கஞ்சி, பணியாரம், வள்ளிக்கிழங்கு பொரித்து உள் வீட்டில் இலை போட்டு பெண் பரிமாறி தயிர் ஊற்ற வேண்டியது. அப்போதே நடு வீட்டினுள் பெண்ணை உட்கார வைத்துப் பெண்ணின் அத்தை, பெண்ணின் கழுத்தில் தும்பைக் கட்டி விட வேண்டியது. அத்தை அல்லது அத்தை மகள் அல்லது அப்பச்சி, பெரியப்பச்சி வகையறாவும் தும்பைக் கட்டலாம்.
மூன்று வேவு அல்லது வழிகள்:
திருமணம் முடிந்தவுடன் மூன்று முறை பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரவேணும். அதில் நீர்ச் சோறு இடுவது முதல் வழியாகவும் மற்ற இரண்டு வழிகளுக்கும் ஒரே தடவையில் வந்து வரலாம். இந்த முறையுடன் திருமண முறைகள் யாவும் பூர்த்தியடைகிறது. செட்டி நாட்டுக் கல்யாணம் சீரும் சிறப்புடன் நிறைவேறுகிறது.
காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல்:
ஒரு குடும்பத்தில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு குடும்பத்தாரையும் பாராட்டி, அவர்களுடைய உறவினர்கள் (தாய்வழி மாமன்) கொடுக்கின்ற விருந்து இது. புது மணமக்கள் தாய்மாமன் வீடுகளுக்குச் சென்று காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல் என்பது தொன்றுதொட்டு நிலவி வருகிறது.
கழுத்துரு கோர்த்தல்:
கழுத்துரு கோர்ப்பதற்கு 10 நிர் வெள்ளை நூல் கண்டு வாங்க வேண்டும். இரு பெரியவர்கள் அந்த நூலில் 21 பாகம் (9 1/2 மீட்டர்) எடுத்து (ஒரு பாகம் = 45 cm) அதை முப்பிரியாக வரும்படி ஒரு மடிப்புக்குள் இன்னொரு மடிப்பை பின்னலாகக் கொடுத்து வாங்கி, சங்கிலிப்பின்னல் போல பின்னி நன்றாக இறுக்கமாகத் திரித்துக் கொண்டு பட்டணம் மஞ்சளை நீரில் நனைத்துக் கொண்டு அந்த நூலில் நன்றாக தேய்த்து மஞ்சள் நன்றாக ஏறும்படி செய்து முறுக்கு விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைப்பது 7 பாகமாக இருக்கும். அதை இரண்டாக மடித்துக் கழுத்துருவில் 31 (சில ஊர்களில் 29) உருப்படிகளையும் கீழ் கண்ட படத்தில் உள்ளபடி கோர்க்கவேண்டும்.
மேல்பாகம், கீழ்பாகம் இரண்டிலும் கோர்த்தபின் இரண்டையும் இரு முனைகளிலும் தனித்தனியே உருவிவராத நிலையில் நன்றாக முடிச்சு போடவேண்டும்.

Thanks:
Arun Kannan,Author,
Chettinattu-Idhikasam
No comments:
Post a Comment