Friday, June 28, 2013

திருநீறு...! விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்



அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ் -கருத்துக்களம்-

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) ...!



பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி 
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு
மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.


(தொகுப்பு - இராம. கண்ணப்பன் )

Friday, June 14, 2013

வில்வம்... ஓர் அதிசய மரம்...!






வில்வம்...
ஓர் அதிசய மரம்...!

அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சம் வில்வம். வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து பசும்பாலுடன் தினசரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. 

நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா? அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம்
கட்டுப்படும்.


விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் தெரியும்.வில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.

பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

Thursday, June 13, 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்...!





பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம்.

அட்ட திக் பாலகர்கள்...!




அட்ட திக் பாலகர்கள்...


எட்டு திசைகளிலும் இருந்து எங்களை காப்பவர்கள் அட்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை திசை நாயகர்கள் என்றும் சொல்லப் படுகிறது.

நாம் செய்யும் எல்லா செயல்களையும் இவர்கள் கவனிக்கிறார்கள்.செயல்களுக்குச் சாட்சியாகவும் இருக்கிறார்கள். என்று பாரதம் சொல்கிறது. அத்துடன் இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அட்டதிக் பாலகர்களில் வருபவர்களே.

அவர்கள் யார்? யார்? அவர்களை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன?

1 , இந்திரன் (கிழக்கு) :- ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.

2, அக்கினி (தென் கிழக்கு) :- உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.

3, யமன் (தெற்கு) :- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.

4, நிருதி (தென் மேற்கு) :- எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.

5, வருணன் (மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.

6 , வாயு (வட மேற்கு) :- வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.

7, குபேரன் (வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.

8, ஈசானன் (வட கிழக்கு) :- மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.

இத்தகைய பலன்கள் தரும் இவர்களை தொடர்ந்து வணங்கி வருவோருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

Tuesday, June 11, 2013

கழுத்துரு சரடு இழைதல்...!



பிள்ளைச் சரடு இழைதல்:
7 பாகம் நூல் எடுத்து, 3ல் ஒரு பங்காக சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒத்தை தும்பை கோர்க்கவேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடது பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்து குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர் கழுத் துருவை கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்டு பின்னர் கழட்டி வைக்கவேண்டும்.

கழுத்துரு உருப்படிகள்:
மேல் பாகம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
கீழ்பாகம்: 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
கடைமணி: 1, 16, 17, 31
உரு: 2, 3, 4, 6, 8, 10, 12, 14, 15, 18, 19, 20, 22, 23, 25, 26, 28, 29, 30
ஏத்தனம்: 5, 13, 21, 27
லெட்சுமி ஏத்தனம்: 24
சரி மணி: 7, 11
திருமாங்கல்யம்: 9

29 உருப்படிகள் இருந்தால் 23, 25 (வட்டத்துக்குள் உள்ளதை) கோர்க்க வேண்டாம்.


Thanks:
Arun Kannan,
Author,
Chettinattu-Idhikasam


அஷ்ட லட்சுமி தியானம்...!




அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.




நட்சத்திர பொதுபலன்கள்;


Photo: நட்சத்திர பொதுபலன்கள்;
------------------------------------
நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.

ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.

1. அசுவினியில் பிறந்தவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார். புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக முயற்சியின்றியே ஒரு காரியத்தைச் செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர். சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப் பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர். விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும் வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார். பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர். கற்பனை உலகில் உலாவுபவர்.வெற்றிகளை சந்திக்கக்கூடியவர்.

12. உத்திரம்: சிறிய வயதிலேயே போராட்டங்களை சந்தித்தாலும்,பிறபகுதியில் சுகமுடன் வாழ்வார்.

13. ஹஸ்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம் பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக் காப்பாற்றத் தயங்காதவர்.

15.சுவாதி:இயற்கயிலேயே ஞானம் கொண்டவர்.நியாயம் பேசுபவர்.நேர்மையான எண்னம் கொண்டவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத் தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத் தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார். இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத் தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம் வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடமாட்டார்.

19. மூலம்: இயற்கை ஞானம் கொண்டவர்.போராட்டமான வாழ்வு கிடைக்கும்,நம்ப்[இக்கை துரோகங்களை சந்திப்பார்.நல்ல வாழ்வுடன் பின் வாழ்வில் இருப்பார்.

20. பூராடம்: சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதியில் சிறப்ப்பாக வாழ்வார். இளம் வயதில் காதல் வசப்படுவார்.

21. உத்திராடம்: உற்றார் உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப் பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம் தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும் நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும் மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி, தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: தன்னைபோலவே எல்லோரும் நியாயமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். விரோதிகளையும் நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை கொண்டு நடக்கக் கூடியவர்.எதிரிக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர்.வெளிநாட்டு யோகம் உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
நட்சத்திர பொதுபலன்கள்;
------------------------------------
நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.

ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.

1. அசுவினியில் பிறந்தவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார். புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக முயற்சியின்றியே ஒரு காரியத்தைச் செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர். சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப் பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர். விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும் வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார். பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர். கற்பனை உலகில் உலாவுபவர்.வெற்றிகளை சந்திக்கக்கூடியவர்.

12. உத்திரம்: சிறிய வயதிலேயே போராட்டங்களை சந்தித்தாலும்,பிறபகுதியில் சுகமுடன் வாழ்வார்.

13. ஹஸ்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம் பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக் காப்பாற்றத் தயங்காதவர்.

15.சுவாதி:இயற்கயிலேயே ஞானம் கொண்டவர்.நியாயம் பேசுபவர்.நேர்மையான எண்னம் கொண்டவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத் தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத் தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார். இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத் தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம் வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடமாட்டார்.

19. மூலம்: இயற்கை ஞானம் கொண்டவர்.போராட்டமான வாழ்வு கிடைக்கும்,நம்ப்[இக்கை துரோகங்களை சந்திப்பார்.நல்ல வாழ்வுடன் பின் வாழ்வில் இருப்பார்.

20. பூராடம்: சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதியில் சிறப்ப்பாக வாழ்வார். இளம் வயதில் காதல் வசப்படுவார்.

21. உத்திராடம்: உற்றார் உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப் பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம் தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும் நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும் மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி, தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: தன்னைபோலவே எல்லோரும் நியாயமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். விரோதிகளையும் நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை கொண்டு நடக்கக் கூடியவர்.எதிரிக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர்.வெளிநாட்டு யோகம் உண்டு.

Thanks:

 பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

நகரத்தார் திருமணம் ...!




நீர்ச்சோறு இடுவது:
திருமணம் முடிந்த அன்று இரவோ அல்லது மறு நாளிலோ, பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு சென்று மாப்பிள்ளைக்கு கஞ்சி, பணியாரம், வள்ளிக்கிழங்கு பொரித்து உள் வீட்டில் இலை போட்டு பெண் பரிமாறி தயிர் ஊற்ற வேண்டியது. அப்போதே நடு வீட்டினுள் பெண்ணை உட்கார வைத்துப் பெண்ணின் அத்தை, பெண்ணின் கழுத்தில் தும்பைக் கட்டி விட வேண்டியது. அத்தை அல்லது அத்தை மகள் அல்லது அப்பச்சி, பெரியப்பச்சி வகையறாவும் தும்பைக் கட்டலாம்.

மூன்று வேவு அல்லது வழிகள்:
திருமணம் முடிந்தவுடன் மூன்று முறை பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரவேணும். அதில் நீர்ச் சோறு இடுவது முதல் வழியாகவும் மற்ற இரண்டு வழிகளுக்கும் ஒரே தடவையில் வந்து வரலாம். இந்த முறையுடன் திருமண முறைகள் யாவும் பூர்த்தியடைகிறது. செட்டி நாட்டுக் கல்யாணம் சீரும் சிறப்புடன் நிறைவேறுகிறது.

காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல்:
ஒரு குடும்பத்தில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு குடும்பத்தாரையும் பாராட்டி, அவர்களுடைய உறவினர்கள் (தாய்வழி மாமன்) கொடுக்கின்ற விருந்து இது. புது மணமக்கள் தாய்மாமன் வீடுகளுக்குச் சென்று காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல் என்பது தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

கழுத்துரு கோர்த்தல்:
கழுத்துரு கோர்ப்பதற்கு 10 நிர் வெள்ளை நூல் கண்டு வாங்க வேண்டும். இரு பெரியவர்கள் அந்த நூலில் 21 பாகம் (9 1/2 மீட்டர்) எடுத்து (ஒரு பாகம் = 45 cm) அதை முப்பிரியாக வரும்படி ஒரு மடிப்புக்குள் இன்னொரு மடிப்பை பின்னலாகக் கொடுத்து வாங்கி, சங்கிலிப்பின்னல் போல பின்னி நன்றாக இறுக்கமாகத் திரித்துக் கொண்டு பட்டணம் மஞ்சளை நீரில் நனைத்துக் கொண்டு அந்த நூலில் நன்றாக தேய்த்து மஞ்சள் நன்றாக ஏறும்படி செய்து முறுக்கு விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைப்பது 7 பாகமாக இருக்கும். அதை இரண்டாக மடித்துக் கழுத்துருவில் 31 (சில ஊர்களில் 29) உருப்படிகளையும் கீழ் கண்ட படத்தில் உள்ளபடி கோர்க்கவேண்டும்.
மேல்பாகம், கீழ்பாகம் இரண்டிலும் கோர்த்தபின் இரண்டையும் இரு முனைகளிலும் தனித்தனியே உருவிவராத நிலையில் நன்றாக முடிச்சு போடவேண்டும்.

Thanks:
Arun Kannan,
Author,
Chettinattu-Idhikasam

நகரத்தார் திருமணம் திருப்பூட்டுதல்...!





விளக்கு வைப்பது:

மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.

பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:

திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.

திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:


இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.


பூமணம் இடுதல்:


பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.


அரிமணம் இடுதல்:


முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.


திருப்பூட்டுதல்:


மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.
மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.
திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.


திருப்பூட்டும் முறைகள்:


நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.


இசைவு பிடிமானம் எழுதுதல்:


இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும்.