வாழ்க்கைக் குறிப்பு
நன்றி விக்கிபீடியாகண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் கம்பனியில் பணியில் சேர்ந்தார்.
கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா. இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
No comments:
Post a Comment