Saturday, July 27, 2013

நகரத்தார் இணையத்தளங்கள்....!

இணையத்தளங்களில் நகரத்தார்...!  நம்மவர்கள் தங்கள் நேரத்தையும், பொருளையும் செலவு செய்து பல இணையத்தளங்களை உருவாக்கி உள்ளார்கள். சென்று பார்ப்பது நமது கடமை. ஆகையால் கீழே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களை சென்று பாருங்கள், படியுங்கள், உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு கூறுங்கள். 



ஆராவயல் நகரத்தார்களின் இணையத்தளம்http://www.aaravayalnagarathar.com/

மாத்தூர் கோவிலின் இணையத்தளம்http://www.mathoorkovil.com/

கோவிலூர் இணையத்தளம்www.koviloor.com

தேவகோட்டை நகரத்தார்களின்
இணையத்தளம்http://www.devakottainagarathar.com/

லண்டன் நகரத்தார்கள் கீழ்கண்ட இணையத்தளங்களை வைத்துள்ளார்கள்.http://www.nagarathar.co.uk/http://www.londonnagaratharsangam.bravehost.com/

ஜப்பானின் டோக்கியோ உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.geocities.com/tokyo/garden/8742/

சிங்கப்பூரில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.singainagarathar.com/

குவைத்தில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.geocities.com/kuwaitnagarathar/index.html

ஆஸ்திரோலியாவில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.ausnagarathar.org/Index.htm
ஆஸ்திரோலியாவில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளத்தில் நமது நகரவிடுதிகள் பற்றி லிங்கும் உள்ளது. http://www.ausnagarathar.org/Nagaraviduthi.htm

நமது நகரவிடுதிகள் பற்றி மேலும் ஒரு லிங்க்
http://www.aec-group.com/nachi4.htm

பெங்களூரில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.bangalorenagarathar.com/

வடஅமெரிக்காவில் உள்ள உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.achi.org/dc/

பஹ்ரைனில் உள்ள நகரத்தார்களின் இணையத்தளம்http://www.bahrainnagarathars.com/

தேவகோட்டை பற்றிய இணையத்தளம்http://www.devakottai.in/
சென்னையில் உள்ள உள்ள நகரத்தார்களின்

இணையத்தளம்http://www.chennainagarathar.com/

நகரத்தார் வரலாறு
நகரத்தார்களின் வரலாறு பற்றி பல இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.http://nagarathar.tripod.com/nagarathar_history.htmhttp://en.wikipedia.org/wiki/Nagaratharwww.rootsweb.ancestry.com/~lkawgw/natchetty.html
பஜனைப் பாடல்கள்

நமது இனத்துக்கேயுரிய பாடல்கள் பலவற்றையும் மற்றும் பஜனை பாடல்கள் பலவற்றையும் தொகுத்து ஒரிடத்தில் தந்துள்ளார் நமது இனத்தைச் சேர்ந்த நண்பர்.http://www.bhajanai.com/

கோவில்கள்சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலின் இணையத்தளம்www.sttemple.com
சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலின் இணையத்தளத்தில் நமது மற்ற கோவில்களின் (உலகளவில்) விபரங்களையும் கொடுத்துள்ளார்கள்.http://www.sttemple.com/STT/english/cht_gallery.asp

திருமண இணையத்தளங்கள்
தற்போது நமது இனத்தவர்கள் பல ஊர்களிலும், பல நாடுகளிலும் இருப்பதால் முன்பு போல எளிதாக திருமணங்கள் பேசி முடிக்க முடிவதில்லை. ஆதலால், திருமணங்களுக்கு நாம் திருமண சேவை மையங்களையும், இணையத்தளங்களையும் நாட வேண்டியுள்ளது. நமது இனத்தவருக்கென சில நல்ல இணையத்தளங்கள் இருக்கின்றன, சிறப்பான சேவையும் செய்து வருகின்றன.
www.nagarthar.net
www.nagaratharthirumanam.கம
www.nagarathar.com
http://www.nagaratharkalyanam.கம/

சோஷியல் நெட்வொர்க்கிங் இணையத்தளங்கள்
சோஷியல் நெட்வொர்க்கிங் இணையத்தளங்கள் எவ்வளவு பிரபலம் என்று பலருக்கும் தெரியும். அதிலும் பலர் தங்களை இணைத்துக் கொள்வது இயல்பு தான். அதிலும் பலர் தங்கள் கம்யூனிட்டி சார்பாக பக்கங்களை துவக்குகிறார்கள். அப்படி புகழ்பெற்ற ஆர்க்குட், பேஸ்புக் போன்ற இணையத்தளத்தில் நகரத்தார்கள், நகரத்தார்கள் ஊர்கள் சார்ந்த பக்கங்கள் தற்சமயம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த குழுவில் எவ்வளவு பேர் மெம்பராக சேர்ந்திருக்கிறார்கள் என்ற விபரம் தான். நம்மவர்கள் ஒருவரை ஒருவரை தெரிந்து கொள்ளவும், வேலை வாய்ப்புக்களை தேடவும், இளைஞர்கள் ஒன்று சேரவும் இந்த குழுக்கள் வழிவகுக்கின்றன.
ஃ Chennai Chettinad - Nagarathar(1,120) ஃ Nattukottai Nagarathar (574) ஃ Devakottai Nagarathar (423) ஃ young nagarathars (467) ஃ Nagarathar Today (166) ஃ YOUNG NAGARATHARS OF TAMILNADU (148) ஃ Nagarathar job links (82) ஃ NAGARATHAR (102) ஃ Nagarathar Sangam(online) (88) ஃ Karnataka Nagarathars. (49) ஃ Mattur Nagarathar Temple (61) ஃ Karnataka-Chettinad Nagarathar (46) ஃ Coimbatore Nagarathar Chettiar (73) ஃ pillayarpatti nagarathar (53) ஃ Chettinad Nagarathar (50) ஃ Piranmalai Nagarathar Chettiar (33) ஃ Young Nagarathars of Hyderabad (31) ஃ Nagarathar (23) ஃ NAGARATHAR F-R-I-E-N-D-S : (39) ஃ devakottai nagarathars (27) ஃ NATTARASAN KOTTANAGARATHAR (19) ஃ Nagarathar matrimony (20) ஃ ILLAYATRANGUDI NAGARATHARS (16) ஃ Nagarathar UruthikottaiVatagai ஃ Nagarathar Business Community (19) ஃ Coimbatore Nagarathars (16) ஃ KOCHI NAGARATHAR ASSOCIATION (10) ஃ karaikudi nagarathars (12) ஃ salem nagarathar (8) ஃ Devakottai Nagarathar Youths (23) ஃ Nemam Kovil Nagarathar (9) ஃ Hosur-Chettinad Nagarathar (6) ஃ NAGARATHAR MANDRAM (7) ஃ PALLATHUR NAGARATHARS (17) ஃ ARIYAKUDI NAGARATHAR (7) ஃ Nagarathar World (4) ஃ mylapore nagarathars (5) ஃ VETRIYUR NAGARATHARs (3) ஃ ATTANGUDI Nagarathars (7) ஃ PAGANERI NAGARATHAR (7) ஃ Kandavirayan Patti Nagarathar (5) ஃ elayaathakudi nagarathar (3) ஃ Qatar Nagarathars (1) ஃ Young Nagarathars @ Mumbai (3) ஃ kilasivalpatti nagarathar (6) ஃ Valayapatti nagarathar sangam (17) ஃ Ariviyur Nagarathar Kazhagam (2) ஃ Koppanapatty Nagarathars (4) ஃ NUSA - Nagarathars U.S.A ஃ Nagarathar Singles (31) ஃ Australian Nagarathar (26) ஃ Singai Nagarathar (10) ஃ Kothamangalam Nagarathars (9) ஃ Nagarathar Izangnar Kutamaipu (10) ஃ Finland Nagarathar Sangam (6) ஃ Singapore Nagarathar (17) ஃ Connecticut Nagarathar (2) ஃ TEXAS NAGARATHARS (3) ஃ Nagarathars in Germany (0)ஃ LONDON NAGARATHARS (5)ஃ Nagarathar Canada ஃ Bahrain Nagarathars ஃ Chicago Nagarathars ஃ Nattukottai chettiars (37) ஃ nattukottai chettiar (18)ஃ The myth of food habits

கோவையைச் சேர்ந்த ஆராவயல் சோமசுந்தரம் அவர்கள் சில நகரத்தார் இணயத்தளங்களை நடத்தி வருகிறார்கள். www.nagaratharpulligal.com

துபாய் நகரத்தார்களின் (யூ.ஏ.ஈ.,) இணையத்தள முகவரி இணையத்தளத்தில் பல நல்ல உபயோகமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது, தமிழ் மென்பொருள், தமிழ் புத்திரிக்கைகள், தமிழ் தினசரிகள், தமிழ் இணையத்தளங்கள், தமிழ் ரேடியோ, தமிழ் கற்றுக்கொள்ள உதவும் இணையத்தளங்கள் ஆகியவற்றின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது பலருக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.www.nagarathars.com

யாஹூ குரூப்புக்கள்
யாஹுவின் குரூப்புக்கள் உலகளவில் மிகவும் பிரசித்திபெற்றவை. அவற்றில் நமது நகரத்தார்கள் பல குரூப்புக்கள் நடத்தி வருகின்றனர். பல சமயங்களில் நமது செய்திகள் பலருக்கு ஒரே சமயத்தில் சென்றடைய இது மிகவும் உபயோக இருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி. செளந்திரநாயகி வைரவன் அவர்களின் இணயத்தளம். நமது இனத்துச் செய்திகள் அதிகம் இருக்கின்றது.
http://sg.geocities.com/soundaranayaki/

அண்ணாமலை சொக்கலிங்கம் அவர்களின் செட்டிநாடு சம்பந்தப்பட்ட இணையத்தளம்http://chettinad.itgo.com/

டாக்டர் அழகப்ப அழகப்பன் அவர்களின் பெருமுயற்சியால் சென்னை பெசண்ட் நகரில் உருவாகியுள்ள அறுபடை வீடு கோவிலின் இணையத்தளம்.http://www.murugan.org/temples/arupadai.htm

நகரத்தார் இலக்கிய சங்கத்தின் இணையத்தளம்http://nagaratharikkiyasangam.org/

யூ.ஏ.ஈ. நகரத்தார்களின் குரூப்
http://groups.Yahoo..com/group/UAENagaratharKootamaipu

இது தவிர பல குரூப்புக்கள் உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://groups.yahoo.com/group/bangalorenagarathar/
http://groups.yahoo.com/group/chettinad/
http://groups.yahoo.com/group/NagaratharCentral/?yguid=147456542
http://groups.yahoo.com/group/NagaratharChitChat/?yguid=216773025
http://groups.yahoo.com/group/Nagarathargal/?yguid=147456542
http://groups.yahoo.com/group/palani-jokes/?yguid=216773025
http://ponniyinselvan.in/forum/history-discussions/lost-city-believed-be-found-pompuhar-5081.html
in.dir.groups.yahoo.com/group/chettinad

நகரத்தார் உணவு சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள்செட்டிநாடு என்றாலே நாவிற்கினிய உணவு வகைகளை யாரும் மறக்கமுடியாது. நம்மால் அதை வியாபார ரீதியாக செய்து பெரிய அளவில் வளராதது ஒரு குறை தான். அதை நிவிர்த்திக்கும் விதமாக பலர் தற்போது செய்து வருகிறார்கள். செட்டிநாட்டு உணவு வகைகளை பத்திரிக்கைகளில் எழுதி உலகறிச் செய்தவர்களில் முதன்மையானவர்கள் என்று எடுத்துக் கொண்டால அதில் சிலரில் திருமதி. ரேவதி சண்முகம் அவர்கள் பெயர் வராமல் இருக்காது. அவ்வளவு பிரபலம். பல சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார். அவரின் ப்ளாக்.revathishanmugam.sulekha.com/

அது போல நெய்வேலியில் வசிக்கும் சொலை ஆச்சியின் கிச்சன் செட்டிநாடு உணவு வகை இணயத்தளங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆயிரக்கணக்காணோர் பார்த்து சென்றுள்ள இணையத்தளமாகும் (ப்ளாக்).
solaiachiskitchen.blogspot.com/

நெற்குப்பையைச் சேர்ந்த திருமதி. அன்னம் செந்தில்குமார் அவர்களின் இணையத்தளம் நிச்சியம் செட்டிநாட்டு உணவு வகைகளை உலகிற்கு எடுத்துக் கூறும் இணயதத்தளங்களில் ஒன்றாகும். சிறப்பான முறையில் வடிவைக்கபட்டிருக்கிறது. நல்ல ஒரு சிறப்பான முயற்சி.chettinadcooking.com

இது தவிர மற்ற இணயத்தளங்கள் / ப்ளாக்குகள்:
www.indobase.com/recipes/category/chettinad-recipes.php\
chettinadrecipes.com
http://groups.yahoo.com/group/Nagarathar_Cooking
chettinadrecipes.blogspot.com
http://chettinadusamayal.blogspot.com/.www.awesomecuisine.com/recipes/.../Chettinadwww.webindia123.com/cookery/region/tamil/chet.htm
blogs.oneindia.in/chettinad+recipes/1/showtags.html
recipeland.com/recipes/recipe/search?q=Chettinad
www.blogged.com/about/chettinad-recipes/
groups.yahoo.com/phrase/chettinad-recipes
en-ulagam.blogspot.com/.../authentic-chettinad-kitchen-
chettinadrecipes.blogspot.com

நகரத்தார் திருமணச் சேவைக்கான இன்னுமொரு இணையத்தளம்Nagaratharworld.com

கனடா நகரத்தார் சங்கத்தின் இணயத்தளம்http://www.canadanagaratharsangam.com/

சென்னை நகரத்தார் இலக்கிய சங்கத்தின் இணையத்தளம்http://nagaratharikkiyasangam.org/home.htm

பழநி நகரத்தார் சங்கத்தின் இணயத்தளம்Palani Nagaratharhttp://www.palaninagarathar.com/

கோவை நகரத்தார் சங்கத்தின் இணையத்தளம்Kovai Nagaratharhttp://www.kovainagarathar.com/

நாச்சியாபுரம் நகரத்தார்களின் இணையத்தளம்Nachiapuramhttp://www.nachiapuram.com/

மலேசிய தனவைசிய சங்கத்தின் இணையத்தளம்Malaysia Thanvaisya Associationhttp://www.mta.com.my

மிதிலைப்பட்டி நகரத்தார்களின் ப்ளாக். நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.Mithilaipattingarathar.blogspot.com

நகரத்தார்களின் வரலாறு பற்றி விரிவாக கூறப்பட்டுள்ள இன்னுமொரு இணையத்தளம்http://www.scribd.com/doc/20148045/History-of-Nattukottai-Nagarathar

செட்டிநாடு கலைப்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய இணையத்தளம்.http://chettinadartefacts.com/category.html

நகரத்தார் சம்பந்தப்பட்ட பொதுவான இரண்டு இணையத்தளங்கள்www.nagarathargateway.com
http://chettinad.itgo.கம/

தேவகோட்டையில் உள்ள நகரத்தார் பள்ளிகளைப் பற்றிய விபரங்கள் அடங்கிய இணையத்தளம்.www.nagaratharschools.org

பர்மாவில் நகரத்தார்கள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரை அடங்கிய இணையத்தளம்Chettiars in Burmahttp://www.econ.mq.edu.au/research/2005/chettiar.pdf

பிள்ளையார்பட்டி கோவிலின் இணையத்தளம்.www.templenet.com/Tamilnadu/karppill.html


Friday, June 28, 2013

திருநீறு...! விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்



அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ் -கருத்துக்களம்-

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) ...!



பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி 
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,
பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு
மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.


(தொகுப்பு - இராம. கண்ணப்பன் )

Friday, June 14, 2013

வில்வம்... ஓர் அதிசய மரம்...!






வில்வம்...
ஓர் அதிசய மரம்...!

அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சம் வில்வம். வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து பசும்பாலுடன் தினசரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. 

நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா? அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம்
கட்டுப்படும்.


விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் தெரியும்.வில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.

பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

Thursday, June 13, 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்...!





பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம்.

அட்ட திக் பாலகர்கள்...!




அட்ட திக் பாலகர்கள்...


எட்டு திசைகளிலும் இருந்து எங்களை காப்பவர்கள் அட்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை திசை நாயகர்கள் என்றும் சொல்லப் படுகிறது.

நாம் செய்யும் எல்லா செயல்களையும் இவர்கள் கவனிக்கிறார்கள்.செயல்களுக்குச் சாட்சியாகவும் இருக்கிறார்கள். என்று பாரதம் சொல்கிறது. அத்துடன் இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அட்டதிக் பாலகர்களில் வருபவர்களே.

அவர்கள் யார்? யார்? அவர்களை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன?

1 , இந்திரன் (கிழக்கு) :- ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.

2, அக்கினி (தென் கிழக்கு) :- உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.

3, யமன் (தெற்கு) :- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.

4, நிருதி (தென் மேற்கு) :- எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.

5, வருணன் (மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.

6 , வாயு (வட மேற்கு) :- வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.

7, குபேரன் (வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.

8, ஈசானன் (வட கிழக்கு) :- மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.

இத்தகைய பலன்கள் தரும் இவர்களை தொடர்ந்து வணங்கி வருவோருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

Tuesday, June 11, 2013

கழுத்துரு சரடு இழைதல்...!



பிள்ளைச் சரடு இழைதல்:
7 பாகம் நூல் எடுத்து, 3ல் ஒரு பங்காக சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒத்தை தும்பை கோர்க்கவேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடது பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்து குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர் கழுத் துருவை கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்டு பின்னர் கழட்டி வைக்கவேண்டும்.

கழுத்துரு உருப்படிகள்:
மேல் பாகம்: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
கீழ்பாகம்: 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
கடைமணி: 1, 16, 17, 31
உரு: 2, 3, 4, 6, 8, 10, 12, 14, 15, 18, 19, 20, 22, 23, 25, 26, 28, 29, 30
ஏத்தனம்: 5, 13, 21, 27
லெட்சுமி ஏத்தனம்: 24
சரி மணி: 7, 11
திருமாங்கல்யம்: 9

29 உருப்படிகள் இருந்தால் 23, 25 (வட்டத்துக்குள் உள்ளதை) கோர்க்க வேண்டாம்.


Thanks:
Arun Kannan,
Author,
Chettinattu-Idhikasam


அஷ்ட லட்சுமி தியானம்...!




அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.




நட்சத்திர பொதுபலன்கள்;


Photo: நட்சத்திர பொதுபலன்கள்;
------------------------------------
நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.

ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.

1. அசுவினியில் பிறந்தவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார். புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக முயற்சியின்றியே ஒரு காரியத்தைச் செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர். சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப் பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர். விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும் வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார். பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர். கற்பனை உலகில் உலாவுபவர்.வெற்றிகளை சந்திக்கக்கூடியவர்.

12. உத்திரம்: சிறிய வயதிலேயே போராட்டங்களை சந்தித்தாலும்,பிறபகுதியில் சுகமுடன் வாழ்வார்.

13. ஹஸ்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம் பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக் காப்பாற்றத் தயங்காதவர்.

15.சுவாதி:இயற்கயிலேயே ஞானம் கொண்டவர்.நியாயம் பேசுபவர்.நேர்மையான எண்னம் கொண்டவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத் தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத் தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார். இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத் தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம் வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடமாட்டார்.

19. மூலம்: இயற்கை ஞானம் கொண்டவர்.போராட்டமான வாழ்வு கிடைக்கும்,நம்ப்[இக்கை துரோகங்களை சந்திப்பார்.நல்ல வாழ்வுடன் பின் வாழ்வில் இருப்பார்.

20. பூராடம்: சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதியில் சிறப்ப்பாக வாழ்வார். இளம் வயதில் காதல் வசப்படுவார்.

21. உத்திராடம்: உற்றார் உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப் பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம் தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும் நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும் மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி, தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: தன்னைபோலவே எல்லோரும் நியாயமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். விரோதிகளையும் நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை கொண்டு நடக்கக் கூடியவர்.எதிரிக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர்.வெளிநாட்டு யோகம் உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
நட்சத்திர பொதுபலன்கள்;
------------------------------------
நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.

ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.

1. அசுவினியில் பிறந்தவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார். புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக முயற்சியின்றியே ஒரு காரியத்தைச் செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர். சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப் பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர். விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும் வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார். பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர். கற்பனை உலகில் உலாவுபவர்.வெற்றிகளை சந்திக்கக்கூடியவர்.

12. உத்திரம்: சிறிய வயதிலேயே போராட்டங்களை சந்தித்தாலும்,பிறபகுதியில் சுகமுடன் வாழ்வார்.

13. ஹஸ்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம் பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக் காப்பாற்றத் தயங்காதவர்.

15.சுவாதி:இயற்கயிலேயே ஞானம் கொண்டவர்.நியாயம் பேசுபவர்.நேர்மையான எண்னம் கொண்டவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத் தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத் தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார். இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத் தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம் வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடமாட்டார்.

19. மூலம்: இயற்கை ஞானம் கொண்டவர்.போராட்டமான வாழ்வு கிடைக்கும்,நம்ப்[இக்கை துரோகங்களை சந்திப்பார்.நல்ல வாழ்வுடன் பின் வாழ்வில் இருப்பார்.

20. பூராடம்: சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதியில் சிறப்ப்பாக வாழ்வார். இளம் வயதில் காதல் வசப்படுவார்.

21. உத்திராடம்: உற்றார் உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப் பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம் தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும் நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும் மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி, தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: தன்னைபோலவே எல்லோரும் நியாயமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். விரோதிகளையும் நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை கொண்டு நடக்கக் கூடியவர்.எதிரிக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர்.வெளிநாட்டு யோகம் உண்டு.

Thanks:

 பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

நகரத்தார் திருமணம் ...!




நீர்ச்சோறு இடுவது:
திருமணம் முடிந்த அன்று இரவோ அல்லது மறு நாளிலோ, பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு சென்று மாப்பிள்ளைக்கு கஞ்சி, பணியாரம், வள்ளிக்கிழங்கு பொரித்து உள் வீட்டில் இலை போட்டு பெண் பரிமாறி தயிர் ஊற்ற வேண்டியது. அப்போதே நடு வீட்டினுள் பெண்ணை உட்கார வைத்துப் பெண்ணின் அத்தை, பெண்ணின் கழுத்தில் தும்பைக் கட்டி விட வேண்டியது. அத்தை அல்லது அத்தை மகள் அல்லது அப்பச்சி, பெரியப்பச்சி வகையறாவும் தும்பைக் கட்டலாம்.

மூன்று வேவு அல்லது வழிகள்:
திருமணம் முடிந்தவுடன் மூன்று முறை பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரவேணும். அதில் நீர்ச் சோறு இடுவது முதல் வழியாகவும் மற்ற இரண்டு வழிகளுக்கும் ஒரே தடவையில் வந்து வரலாம். இந்த முறையுடன் திருமண முறைகள் யாவும் பூர்த்தியடைகிறது. செட்டி நாட்டுக் கல்யாணம் சீரும் சிறப்புடன் நிறைவேறுகிறது.

காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல்:
ஒரு குடும்பத்தில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு குடும்பத்தாரையும் பாராட்டி, அவர்களுடைய உறவினர்கள் (தாய்வழி மாமன்) கொடுக்கின்ற விருந்து இது. புது மணமக்கள் தாய்மாமன் வீடுகளுக்குச் சென்று காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல் என்பது தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

கழுத்துரு கோர்த்தல்:
கழுத்துரு கோர்ப்பதற்கு 10 நிர் வெள்ளை நூல் கண்டு வாங்க வேண்டும். இரு பெரியவர்கள் அந்த நூலில் 21 பாகம் (9 1/2 மீட்டர்) எடுத்து (ஒரு பாகம் = 45 cm) அதை முப்பிரியாக வரும்படி ஒரு மடிப்புக்குள் இன்னொரு மடிப்பை பின்னலாகக் கொடுத்து வாங்கி, சங்கிலிப்பின்னல் போல பின்னி நன்றாக இறுக்கமாகத் திரித்துக் கொண்டு பட்டணம் மஞ்சளை நீரில் நனைத்துக் கொண்டு அந்த நூலில் நன்றாக தேய்த்து மஞ்சள் நன்றாக ஏறும்படி செய்து முறுக்கு விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைப்பது 7 பாகமாக இருக்கும். அதை இரண்டாக மடித்துக் கழுத்துருவில் 31 (சில ஊர்களில் 29) உருப்படிகளையும் கீழ் கண்ட படத்தில் உள்ளபடி கோர்க்கவேண்டும்.
மேல்பாகம், கீழ்பாகம் இரண்டிலும் கோர்த்தபின் இரண்டையும் இரு முனைகளிலும் தனித்தனியே உருவிவராத நிலையில் நன்றாக முடிச்சு போடவேண்டும்.

Thanks:
Arun Kannan,
Author,
Chettinattu-Idhikasam

நகரத்தார் திருமணம் திருப்பூட்டுதல்...!





விளக்கு வைப்பது:

மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.

பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:

திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.

திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:


இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.


பூமணம் இடுதல்:


பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.


அரிமணம் இடுதல்:


முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.


திருப்பூட்டுதல்:


மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.
மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.
திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.


திருப்பூட்டும் முறைகள்:


நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.


இசைவு பிடிமானம் எழுதுதல்:


இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும்.

Thursday, May 9, 2013



செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.

இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.

இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.


அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.

பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்
இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:

1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.

Thanks
தமிழ் நாடு சுற்றுலாத்துறை

Saturday, February 23, 2013

சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள்...!




சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளை பற்றி பார்க்கலாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர். அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடி கற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம் இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும். அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....

இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும்.

வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.

இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும்.

இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது. இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.

இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.

அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.

பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப் படுத்துகின்றனர்.இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்
இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:

1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.

Thanks
தமிழ் நாடு சுற்றுலாத்துறை

Saturday, February 9, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்




108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

Friday, February 8, 2013

அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்..!





வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழ வேண்டும்? நம்பிக்கைக்குரியவர் யார்? துரோகி யார்? இப்படி எண்ணற்ற வாழ்வின் மேன்மைக்கு தேவையானவற்றை அனுபவ பாடமாக கற்று தருபவர் சனீஸ்வர பகவான்.

ஒரு அதிகாரியிடம் வேலை ஆக வேண்டும் என்றால், அவருடைய குடும்பத்தினரின் ஆதரவை பெற்றாலே நிச்சயம் நம் வேலை நடந்து விடும் என்று சொல்வார்கள். அதுபோல, சனீஸ்வரரால் தொல்லை என்றால், தனித்து இருக்கும் சனி பகவானை வணங்கினாலும், திருநரையூரில் தன்னுடைய இரு தேவிகளான மந்தாதேவி, ஜேஷ்டாதேவியுடனும், தன் பிள்ளைகளான குளிகன், மாந்தி என்று குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில் …மேலும் படிக்க

நன்மைகளை அள்ளி தர குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.!http://bhakthiplanet.com/2013/02/thirunaraiyur-temple/

நன்மைகளை அள்ளி தர குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.! 

Friday, January 18, 2013

கவிஞர் கண்ணதாசன் - நகைச்சுவை..!




மேதைகளின் நகைச்சுவை..!

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''